ஒரு சிறுவனின் வாழ்க்கை ஜீரோவால் மாறிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
ஒரு சிறுவன் நெடுஞ்சாலையில் சிறிய டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த கடையை முதலில் சிறுவனின் தந்தை நடத்தி வந்தார். ஆனால் அவர் இறந்து விட்டதால் வேறு வழியின்றி சிறுவன் டீக்கடையை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த கடையில் ஒருவர் கூட டீ குடிப்பதற்கு வரவில்லை. இதன் காரணமாக பல நாட்கள் சாப்பிடாமல் சிறுவன் பட்டினியோடு இருந்தார். இதனால் கவலையடைந்த சிறுவன் தன்னை ஆறுதல் படுத்திக் கொள்வதற்காக வெறும் டம்ளரை டீ போன்று ஆற்றிக் கொண்டிருப்பார். இந்நிலையில் 2 வாலிபர்கள் மது அருந்துவிட்டு நெடுஞ்சாலையில் இருந்த ஒரு கல்லில் எழுதி இருந்த ஜீரோ என்ற நம்பரை மட்டும் அழித்தனர்.
இதனால் மறுநாள் சிறுவனிடம் அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் Nanokhedo செல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என கேட்டுள்ளனர். இதற்கு சிறுவன் வாகனத்தில் வந்தவர்களுக்கு டீ குடிக்கக் கொடுத்து விட்டு 90 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனால் சிறுவனின் கடையில் டீ வியாபாரம் கலைகட்டியது. மேலும் இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்காக சிறுவன் நெடுஞ்சாலையில் இருந்த கல்லை சென்று பார்த்துள்ளார். அப்போது கல்லில் 90 கிலோ மீட்டருக்கு பதிலாக 9 கிலோ மீட்டர் என எழுதி இருந்தது. அதிலிருந்த 0 நம்பர் அழிக்கப்பட்டிருந்தது. இதனால் சிறுவன் கல்லுக்கு அருகில் ஊதுபத்தியை ஏற்றி விட்டு அங்கிருந்து சென்றார்.