விக்னேஷ் சிவன் செய்ததை பார்த்த ரசிகர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டார் எனக்கூறி வருகின்றார்கள்.
ஜூன் மாதம் 9-ம் தேதி நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் செய்த சில காரியங்கள் பிடிக்காமல் நயன்தாரா அவர் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கணவன்-மனைவி இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து விடுவார்கள் என கூறப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் அமைதி காத்தார். அன்பான இயக்குனரே ஏதாவது சொல்லுங்களேன் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விக்னேஷ் சிவன், அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்குகின்றார். நயன்தாரா தான் இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கின்றார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஏ.கே 62 படத்திற்கு லொகேஷன் பார்க்கத்தான் ஸ்பெயினுக்கு சென்று இருக்கின்றார்களாம். லொகேஷன் பார்த்த மாதிரியும் ஆச்சு, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது மாதிரியும் ஆச்சு என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.