உங்கள் உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமையும் இந்த கீரையை மட்டும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சாலை ஓரங்களில், தரிசு நிலங்களில் புதர் போன்று வளர்ந்து கிடக்கும் ஒரு செடிதான் துத்தி கீரை. இவை பார்ப்பதற்கு களைச் செடி போன்று தான் இருக்கும். ஆனால், அவற்றிற்கு அத்தனை மருத்துவக் குணங்கள் உள்ளன.
இந்த துத்தி இலையானது இரண்டு வகைகளாகக் கூறுவர். ஒன்று பெருந்துத்தி, மற்றொன்று சிறுந்துத்தி. இந்த துத்தி இலைகளை கூட்டு போல் வைத்தும், சூப் செய்தும் சாப்பிடலாம். இதன் மூலம், உடல் வெப்பத்தினால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த முடியும்.
இதன்மூலம் மூல நோய், அல்சர், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும். தொடர்ந்து துத்து இலையினை சாப்பிட்டு வந்தால் கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். மேலும், இதன் மூலம் சர்க்கரை நோய் வருவதனையும் தடுக்க முடியும்.
இவை ஆண்களின் விந்தனுக்களை அதிகப்படுத்தும். குழந்தைபேறு இல்லாமல் சிரமப்படும் ஆண்கள் இதனை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தால் அணுக்களின் எண்ணிக்கை கூடும். 3 முதல் 6 மாதங்களில் நல்ல முறையில் குழந்தைபாக்கியம் கிடைக்கும்.