Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தில் ஊடுருவிய தொற்று… தெருவுக்கு அதிரடி “சீல்”… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தில் வசித்து வரும் ஐந்து பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள தெருவுக்கு சுகாதாரத் துறையினர் “சீல்” வைத்தனர்.

திண்டுக்கல்லில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு தெருவில் அல்லது ஒரு வீட்டில் கொரோனா வைரஸால் 3-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தகரத்தால் மூடி ஊரக வளர்ச்சித்துறையினரும், சுகாதாரத் துறையினரும் “சீல்” வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 22 இடங்கள் தகரத்தால் மூடி “சீல்” வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு சீலப்பாடி மூவேந்தர் நகரில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தகரத்தால் அடைத்து “சீல்” வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.

Categories

Tech |