Categories
உலக செய்திகள்

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொலை…. சிறுவன் கைது…. கொடூர செயலின் பின்னணி என்ன….?

ஒரே குடும்பத்தை சேர்ந்த  நால்வர் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள மேற்கு வர்ஜீனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி மற்றும் அவரது இரு பிள்ளைகள் ஆகிய  நால்வர் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை  போலீசார்  கண்டுபிடித்தனர். மேலும் இந்த  கொலை தொடர்பாக  சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்நிலையில் குடும்பத்தில் உள்ள ஐந்தாம் நபரிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அந்தக் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் பல நாட்களாக குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை என்பதால் நேரில் பார்க்க சென்றுள்ளார். குடியிருப்பில் சென்று பார்த்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்றவர் கொடூர காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் சடலமாக கிடந்த நான்கு பேரையும் மீட்டு பரிசோதித்துப் பார்த்ததில் அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.  மேலும் அவர்கள் கொல்லப்பட்டதற்கான  காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |