Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு உறுதி…. முக்கிய அதிகாரி நேரில் ஆய்வு…. வேகமாக பரவும் 2 ஆவது அலை….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சியில் ஒரே குடும்பத்திலிருந்த 6 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தக் குடும்பத்திலிருந்த 3 ஆண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் மற்ற 3 நபர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடியிருந்தயிடம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிக்கை விடப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கலெக்டரின் உத்தரவின்பேரில் மாவட்டத்தின் இறப்பு மற்றும் பிறப்பு பதிவுகளின் கூடுதல் இயக்குனரான அண்ணாமலை நேரில் சென்று அப்பகுதியை ஆய்வு செய்தார். இதற்கிடையே அப்பகுதியிலிருக்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசம் அணியவும் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |