Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு…. புதுப்பெண் மாயம்…. போலீஸ் அதிரடி….!!

தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரியா என்பவருடன் 4 மாதங்கள் முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்குமிடையே கடந்த 1 வாரமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவர் எங்கு சென்றுள்ளார் என்று எவருக்கும் தெரியாத நிலை இருந்திருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயப்பிரியாவின் குடும்பத்தினருக்கும், ராஜ்குமாரின் குடும்பத்தினருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜெயப்பிரியாவின் தந்தையும், அவரது மகனும் ராஜ்குமாரின் குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாள் சரமாரியாக வெட்டினர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் ஜெயப்பிரியாவின் தாய் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |