சேலம் மாவட்டத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி முனியம்மாள். இத்தம்பதிகளுக்கு மணி என்ற மகனும் சபரி என்ற மருமகனும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் நாமக்கல்லில் கல் உடைக்கும் பணியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்கள். இதனையடுத்து நேற்று வேலையை முடித்து விட்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தோப்பு – சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி ரோட்டில் தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது லாரி டிரைவர் வலதுபுறமாக லாரியை திருப்பியதால் மோட்டார் சைக்கிள் சாலையில் உள்ள இரும்பு தடுப்பில் மோதி லாரி சக்கரத்தின் உள்ளே சிக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.