திருவண்ணாமலை அருகே ஆடுகளை குளிப்பாட்ட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே சு. கம்பம்பட்டு என்ற கிராமத்தில் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நஸ்ரீன், நசீமா மற்றும் சாஹிரா ஆகியோர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். மாட்டுப் பொங்கலுக்கு ஆடு, மாடுகளை குளிப்பாட்டி வண்ண வண்ண கலரில் பொட்டு வைத்து பொங்கல் வைப்பது வழக்கம்.
இதற்காக 3 சிறுமிகளும் ஆடுகளை குளிப்பாட்ட சென்றபோது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.