சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சளி இருமல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த போது 4 பேருக்கும் தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் அவர்கள் வீட்டின் முன்பு தகரம் வைத்து அடைப்பு ஏற்படுத்தி உள்ளனர்.