Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு… கொலையா? அல்லது தற்கொலையா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதிகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் சூழலில் சித்ரா என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆறு பேரின் சடலத்தையும் பிரேத  பரிசோதனைக்காக ஜம்மு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் இவர்கள் உயிரிழந்ததற்கான  காரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு காஷ்மீரின் சோட்டிபோரா  மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் காஷ்மீரி பண்டிட் கொல்லப்பட்டுள்ளார். மேலும் அவரது சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |