Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே குரல் இபிஎஸ்….. ஒரே குடை இபிஎஸ்.. நிச்சயம் இதான் நடக்கும்…. அடித்து சொல்லும் ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு கழக அவைத்தலைவர் அன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் உடைய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், ரசிகர் மன்ற செயலாளராக இருந்து, முதல் முதலில் 1954இல் புரட்சித்தலைவர் பெயரில் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் துவக்கிய பெருமை நமது கழக அவைத் தலைவருக்கு உண்டு. அதே போல கழகத்திற்கு சிறை சென்றது,

கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கு கொண்டது, அதுபோல கழகத்திற்கு விசுவாசமாக இருந்து அன்றிலிருந்து இன்றுவரை திசை மாறாமல் எந்தவித ஒரு ஆசா, பாசங்களும் விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் கழகம் ஒன்ரே  என்னுடைய உயிர் மூச்சு என்று வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பது கழகத்தினுடைய அவைத்தலைவர்.

அப்படிப்பட்ட ஒரு அடிமட்ட தொண்டன் 1953இல் அரசியல் வாழ்வைத் தொடங்கி, இன்றைக்கு கழகத்தினுடைய உச்சபட்ச பொறுப்பாக இருக்கின்ற கழக அவை தலைவராக வந்தது இன்றைக்கு கழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த அன்பு சகோதரர்கள் அத்தனை பேருமே இன்றைக்கும் மகிழ்ச்சி கொள்ளத்தக்க ஒரு தேர்வை இன்றைக்கு பொதுக்குழு தேர்வு செய்திருக்கிறது. அதேபோன்று பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களும்,

புரட்சி தலைவி அம்மா அவர்களும் இந்த இயக்கத்தை உருவாக்கி புரட்சித் தலைவர் உருவாக்கி, அம்மா அவர்கள் கட்டிக்காத்து இன்றைக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற அந்த ஒரே குரலோடு ஒரு படையின் கீழ் இன்றைக்கு இ.பி.எஸ் அவர்கள் தான் வர வேண்டும் என்ற அந்த குரல் இன்றைய கழகத்தின் மத்தியில் ஒழித்து, பதினோராம் தேதி ஒரு செயல் வடிவம் பெறுகின்ற வகையில் நிச்சயமாக பொதுக்குழுவில் ஒரு செயல் வடிவம் பெறும் என தெரிவித்தார்.

Categories

Tech |