தமிழகத்தில் திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளிலும் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறை மாணவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி அளவில் கல்வி, விளையாட்டு, நுண் கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிகல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மாநிலத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 68 பேரை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று துபாய் அழைத்து செல்கிறார். பின் அவர்கள் 13ம் தேதி சென்னை திரும்புகின்றனர்.