ஒகினாவா நிறுவனம் ஒரு புதிய வகை மின்சார ஸ்கூட்டரினை உருவாக்கியுள்ளது . இதற்கு ஓகி 90 என்னும் பெயரிடப்பட்டுள்ளது . இதனை இந்தியாவில் மார்ச் 24ஆம் தேதி அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்கூட்டர் பலவகையான அம்சங்களைக் கொண்டுள்ளன. சில்வர் பீனிக்ஸ் ,எக்ஸ்டெண்ட் சீட்டுகள், அலாய் வீல், டூயல் ஸ்பிரிங் ,ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. லித்தியம் அயன் பேட்டரி கழற்றும் வசதியுடனும் எளிதாகவும் வேகமாகவும் சார்ஜ் ஏறும் வகையில் இவை பொருத்தப்பட்டுள்ளது.
இது 150 கிலோமீட்டர் முதல் 180 கிலோமீட்டர் வரை செல்லும் எனவும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் செல்லும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் நேவிகேஷன், டயக்னாஸ்டிக் , ஜியோஒ-ஃபென்சிங் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளன. இந்தஓகி 90 ஸ்கூட்டர் ஆனது சிம்பிள் ஒன், பஜாஜ் ஸ்டாக், டிவிஎஸ், ஓலா s1 இவைகளுக்கு போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்கூட்டரின் விலை 1 லட்சம் முதல் 1.20 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.