Categories
உலக செய்திகள்

“ஒரே சீனா கொள்கை” அமெரிக்கா என்னதான் சொல்ல வருது…. நீடிக்கும் குழப்பம்….!!!

அமெரிக்க  நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்தது. இந்த எதிர்ப்பை மீறியும் தன்னுடைய பயணத்தில் உறுதியாக இருந்த நான்சி பெலோசி கடந்த 2-ம் தேதி தைவானுக்கு சென்றார். அங்கு பேசிய நான்சி பெலோசி, தைவான் ஜனநாயக அரசுக்கு ஆதரவு தருவதில் அமெரிக்கா உறுதியுடன் இருக்கிறது. தைவான் நாடு பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும், தங்களுடைய வளர்ச்சி மற்றும் எதிர்காலம் பற்றிய கருத்தில் உறுதியாக இருந்து வளர்ந்து வரும் நாடாக மாறியுள்ளது. தைவான் மற்றும் உலக நாடுகளில் ஜனநாயகம் பற்றிய அமெரிக்காவின் கருத்து இரும்பு கவசம் போன்று இருக்கும் என்றார்.

இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை சுற்றி போர்க்கப்பல்களை நிறுத்தியதோடு ராணுவ பயிற்சியையும் மேற்கொண்டது. அதோடு தைவான் மீது பொருளாதார தடைகளையும் சீனா விதித்தது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு செய்தியாளர் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரே சீனா கொள்கை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தைவானின் தனி நாடு என்ற சுதந்திரத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் இரு நாடுகளும் தனிப்பட்ட முறையில் மாற்றங்கள் செய்தால் அதை நாங்கள் எதிர்க்கிறோம்.

சீனா மற்றும் தைவானுக்கிடையே இருக்கும் பிரச்சனைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடனின் உதவியாளர் ஒரு பேட்டியில் பேசும்போது, சீனாவின் நிலைப்பாடுகள் நிலையற்ற தன்மையுடையதாக இருப்பதாகவும், தைவானை சுற்றி போர்க்கப்பல்களை நிறுத்தி இருப்பதை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் கூறினார். மேலும் அமெரிக்கா ஒருபுறம் சீனாவுக்கு ஆதரவு அளிப்பது போன்று பேசினாலும், மற்றொருபுறம் எதிர்ப்பை தெரிவிப்பதால் அமெரிக்கா-சீனா கொள்கையில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

Categories

Tech |