Categories
உலக செய்திகள்

“ஒரே சீனா கொள்கை” இந்தியா ஆதரவு கொடுக்கும்…. சீன தூதர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை….!!!!

அமெரிக்க நாட்டின் சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் நாட்டிற்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை சுற்றி போர் கப்பல்களை நிறுத்தியதோடு ராணுவ பயிற்சியும் மேற்கொண்டு வருகிறது. அதன்பிறகு அமெரிக்கா ஒரே சீனா என்ற கொள்கையையும் மீறி உள்ளதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா ஒரே சீனா கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று பதிவிட்டுள்ளார். அதன் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தைவானுக்கு சென்றது ஒரு ஆபத்தான பயணம் ஆகும்.

இது அரசியல் ஆத்திரம் மூட்டும்  நிகழ்வு என்று கண்டித்துள்ளார். இந்த செயல் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை மீறிய செயலாகும். நாங்கள் அமெரிக்காவிடம் சீனா மற்றும் தைவான் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். கடந்த 1971-ஆம் ஆண்டு ஐநா சபையில் சீனாவின் சட்டபூர்வமான இடத்திற்கு இந்தியா வாக்களித்தது. அதேபோன்று தற்போதும் சீனாவின் நியாயமான நிலைப்பாட்டை புரிந்து கொண்டு இந்தியா துணைநிற்கும் என்று நம்புகிறோம் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |