கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸை கண்டறிய பல்வேறு நடைமுறைகள் கையாளப்படுகின்றன. முதலில் பரிசோதனை செய்யப்பட்டு பின், டேக்பாத் கருவி மூலமாக தொற்று உருமாறி உள்ளதா எனவும் மரபணு பகுப்பாய்வு மூலம் பாதிப்பு இருக்கிறதா எனவும் கண்டறியப்படுகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டு, டேக்பாத் பரிசோதனை செய்து பின் மரபணு ஆய்வு மையத்துக்கு அனுப்பி முழு விபரம் பெற 7 நாட்கள் வரை ஆகின்றது.
இதன் காரணமாக விரைந்து பரிசோதனை முடிவுகளைப் பெற டாடா மருந்து நிறுவனம் TATA MD CHECK RT-PCR OmiSure என்ற பரிசோதனை கருவியை கண்டறிந்துள்ளது. இந்த புதிய கருவி ஒரே சோதனையில் ஒமிக்ரான் தொற்றை கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த கருவி பரிசோதனை முறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிந்த பிறகே கொள்முதல் செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.