ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக ரேஷன் அட்டை வழங்கப்பட்டு அதன் மூலமாக மக்கள் நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். குடும்ப அட்டை மூலமாக அந்தந்த பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளில் வாங்கி கொள்ளலாம். இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள், தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்களுடைய ரேஷன் அட்டையை வைத்து வெளி மாநிலங்களில் வேலை செய்யும்போது வாங்க முடிவதில்லை என்பதன் காரணமாக ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் இருந்தது.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை 17 மாநில அரசுகள் அமல்படுத்தி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள், தற்காலிக பணியாளர்கள் பயன்பெறுவார்கள். தகவல் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி இந்த சீர்திருத்தம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.