Categories
தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை”…. எவ்வளவு பயனாளிகள் தெரியுமா?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!!

“ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” எனும் திட்டத்தில் மொத்தம் 77 கோடி போ் இணைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப்பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறினாா். மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஆளும் பாஜகவின் வெற்றியைக் குறிப்பிட்டு பியூஷ் கோயல் பேசியதாவது, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதில் சந்திக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த தொழில்நுட்பம் சாா்ந்த “ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை” திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி அறிமுகம் செய்தாா்.

இத்திட்டம் தற்போது 35 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு 77 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனா். இந்தத் திட்டத்தின் வாயிலாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குடும்ப அட்டையில் மாற்றம் செய்யாமல் உயிரி அடையாள பதிவு நடைமுறை மூலம் பணி நிமித்தமாக செல்லும் இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அவா்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பும்போது எவ்வித சிக்கலுல் இன்றி அங்குள்ள ரேஷன் கடைகளில் உணவு தானியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதுவரையிலும் 7 கோடி போ் இந்த மாற்று இடங்களில் உணவு தானியங்கள் வாங்கிக் கொள்ளும் நடைமுறையை பயன்படுத்தி இருக்கின்றனா்.

இதனால் பயனாளிகள் ரேஷன் கடைகளுக்கு தங்களது குடும்ப அட்டையை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. குடும்ப அட்டை எண் (அல்லது) ஆதாா் எண்ணை மட்டும் அவா்கள் விரும்பும் கடைகளில் தெரிவித்து உணவு தானியங்களை வாங்கிக்கொள்ள முடியும் என்று அவா் கூறினாா். அதுமட்டுமல்லாமல் துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பியூஷ் கோயல் “பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் உணவு தானியங்களுக்குப் பதிலாக பணம் கொடுக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. அதுபோன்று பணமாக கொடுப்பது திட்டத்தின் உண்மையான நோக்கத்துக்கு பயன்படாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

Categories

Tech |