Categories
தேசிய செய்திகள்

ஒரே நாடு ஒரே சந்தை என்ற கனவு நிறைவேறியுள்ளது ….!!

வேளாண் மசோதாக்கள் சட்டமாக்கியுள்ளதன் மூலம் ஒரே நாடு ஒரே சந்தை என்ற கனவு நிறைவேறி உள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தா அப்பாஸ்நக்விர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வேளாண்த்துறை சீர்திருத்தம் தொடர்பான சட்டங்களில் நன்மைகள் விளக்கும் வகையில் உத்திரப்பிரதேச மாநிலம் ரான்பூர் பகுதியில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் நபி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேளாண்துறை இடைத்தரகர்களுக்கு சாதனமாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். விவசாயிகளின் நலனுக்கான மத்திய அரசு கொண்டுவந்து சட்டங்களுக்கு எதிரான அவர்களின் பொய்கள் எடுபடாது என்று கூறினர். விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு அதிக லாபம் பெற முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த சட்டம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் தங்களை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்கிறது என்று கூறியுள்ள அவர் விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று உறுதிபட பேசியுள்ளார். அதேபோல அரசு கொள்முதல் நிலையங்களும் தொடர்ந்து செயல்படும் தாங்கள் விளைவிக்கும் பொருள்களை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் சேகரித்து வைத்துக்கொள்ளும் சுதந்திரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

அதே சமயம் இடைத்தரகர்கள் தலையீடுயின்றி நாட்டின் எந்த பகுதியில் நல்ல விலை கிடைக்கிறதோ அந்தப் பொருள்களை விவசாயிகள் விற்க முடியும் என்று பேசியுள்ளார். இதன்மூலம் ஒரே நாடு ஒரே சந்தை என்ற கனவு நிறைவேறி உள்ளது என்று பெருமிதத்துடன் பேசினார். நாட்டின் கிராமப்புற மக்கள் விவசாயிகள் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதியாக உள்ளது அவர்களது உரிமைகளை எந்த விலை கொடுத்தும் அரசு காப்பாற்றும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |