உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்போது மீண்டும் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக புதிய பிஎச் பதிவெண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இனிமேல் புதிதாக வாங்கும் வாகனங்களுடன் மாநிலம் விட்டு மாநிலம் இடம் மாறினாலும் வாகனத்தை மறுபதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசும், போக்குவரத்துத் துறையும் தெரிவித்துள்ளது. இதற்காக பாரத் சீரிஸ் அதாவது பிஎச் (BH Bharat series) எனும் புதிய நடை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ராணுவ வீரர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் கிளை கொண்ட தனியார் நிறுவன ஊழியர்கள் இந்த நடைமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் வாகனத்தின் உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போதும் புதியதாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.