“ஒரே நாடு ஒரே பதிவு” நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மதுரையில் கூறியிருப்பதாவது, “ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி வருகிற 19ஆம் தேதி திறந்து வைக்க இருகிறார். இதற்கிடையில் பத்திரப்பதிவுதுறை முறைகேட்டை தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட சட்ட முன்வடிவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இது நாட்டிற்கே முன் உதாரணமாக விளங்கும், மேலும் தவறுகள் முழுமையாக குறையும்.
ஆனால் “ஒரே நாடு ஒரே பதிவுக்கு” சாத்தியமில்லை. சார்பதிவாளர்கள் தவறு நிரூபிக்கப்பட்டால் 7 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும். பத்திரப்பதிவில் வழிகாட்டுதல் மதிப்பைவிட குறைவாக பதிவு செய்யக்கூடாது. மேலும் மனை இடத்தை காலியிடமாக பதிந்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.