ஒரே மொழி, ஒரே நாடு என்பவர்கள் நாட்டின் எதிரிகள் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் மலையாள செய்தி ஊடகமான மனோரமா இன்று நடத்திவரும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலமாக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கேரள மாநிலம் முதல்வர் பிரனாய் விஜயன் நேரில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “தொற்று காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு நேரால் என்னால் வரமுடியவில்லை. இந்தியா மேலும் வலிமையோடு இருக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பதே நாட்டை காப்பதாக அர்த்தம்.
தமிழ், மலையாளம் மொழிகளுக்கு இடையே ஆழமான உறவு உள்ளது. மாநில அரசுகள் தன்னிறைவை அடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும். மாநில அரசுகள் வலுவாக இருப்பது மத்திய அரசுக்கு பலம் தானே தவி,ர பலவீனம் அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. இதுதான் இந்தியாவின் தற்போதைய நிலைமை. திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கானது அல்ல, கொள்கைக்கான கூட்டணி. தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும். ஒரே நாடு ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள். இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி என்பது சாத்தியமில்லை. இந்தியாவில் பழமொழி பேசும், பல கலாச்சாரத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.