Categories
தேசிய செய்திகள்

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம்….. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!!!

நாடுமுழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் துயரம் தொடர்பாக ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சில மாநிலங்களில் மட்டுமே இந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.

அதில், ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை பெறுவதற்கு உதவியாக ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் அமைப்புசாரா புலம்பெயர் தொழிலாளர் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற ஏன் காலதாமதம் ஆகிறது என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் துயரம் தொடர்பாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Categories

Tech |