ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கு வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசின் பல்வேறு துறைகளின் மக்கள் மைய சீர்திருத்தங்களை மாநிலங்கள் மேற்கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலங்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டிய முக்கியமான சீர்திருத்தங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்ட செயலாக்கம், தொழில்களை எளிதாக செய்வதற்கான சீர்திருத்தம்,நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் பயன்பாட்டு சீர்திருத்தங்கள் மற்றும் மின்சாரம் துறை சீர்திருத்தங்கள் ஆகும்.
இந்த சீர்திருத்தங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவற்றை வெற்றிகரமாக செயல் படுத்தினால் மாநிலங்களுக்கு கூடுதல் கடன், கூடுதல் நிதி உதவி அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 9 மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளனர்.