மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் 17 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் அதாவது ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகம் படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டம் 17 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் சமீபத்தில் ஒன்றிய பிரதேசமான ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து, உத்தரகாண்ட் ஆகியவை இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டமானது அவ்வப்போது பணியிடங்களை மாற்றிக்கொள்ளும் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் மற்றும் தினசரி தொழிலாளர்கள், சாலையோர மக்கள், ஆகியோருக்கு உபயோகமாக இருக்கும். இதன் மூலம் வேலை நிமிர்த்தமாக வெளியில் இருப்பவர்கள் தங்களது ரேஷன் கார்டுகள் மூலம் எந்த நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். இதன் மூலம் 69 பேர் பயனடைந்து வருவதாக கூறப்படுகிறது.
பயணிகள் தங்கள் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளை அடையாளம் காணவும், தங்களுக்கு என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்ற விவரத்தையும் தெரிந்துகொள்ளும் விதமாக என் ரேஷன் என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வடிவமைக்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக 14 மொழிகளில் வடிவமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.