ஒரே நாளில் நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் இருக்கும் பனங்குளம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது சைக்கிளில் கீரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வேன் முதியவரின் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வீரமுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கீரமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரக்கு வேன் ஓட்டுனர் முருகேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் இருக்கும் மேலபச்சகொடி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரகுநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலைக்காக விராலிமலை பகுதிக்கு சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் போது அவ்வழியே சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறமாக எதிர்பாராதவிதமாக மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரகுநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரகுநாதன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து விராலிமலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.