அரண்மனை-3 படத்தின் முதல் பாடல் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை-3 படம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, நளினி, மனோபாலா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி அரண்மனை-3 படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ‘அரண்மனைக்குள்ள யாருடா’ என தொடங்கும் இந்த பாடலை தெருக்குரல் அறிவு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த பாடல் வெளியான ஒரே நாளில் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தல் சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் .