ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,144 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,052 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மாநிலத்தில் கொரோனாவால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,650 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து 1,35,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதிலும் தற்போது 21,412 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது.