Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேருக்கா…? மாபெரும் தடுப்பூசி முகாம்… சுகாதாரத்துறையினர் அறிவிப்பு…

தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 80,630 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்துள்ளது. அதற்காக மாவட்டத்தில் சுமார் 620 இடங்களில் முகாம்கள் அமைத்தும், 80 நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் பொதுமக்கலுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து 893 செவிலியர்கள், 1,400 பள்ளி ஆசிரியர்கள், 360 தன்னார்வலர்கள், 160 சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோர் தடுப்பூசி போடும் மையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கிராமபுரங்களில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதனைதொடர்ந்து சில பகுதிகளில் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக முட்டை, குலுக்கல் முறையில் பரிசு போன்றவை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் ஒரே நாளில் 80,630 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தடுப்பூசி போடும் மையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.

Categories

Tech |