வடகொரியா கடந்த ஒரேநாளில் 2 க்ரூஸ் ரக ஏவுகணைகளை சோதித்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வடகொரியா கொரோனா மற்றும் உலக நாடுகளின் பொருளாதார தடை போன்ற காரணங்களால் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது.
ஆனால் வட கொரியா தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருவது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரே நாளில் மட்டும் 2 க்ரூஸ் ரக ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை தொடர்புடைய தகவலை அமெரிக்க உளவு துறை மற்றும் தென்கொரிய ராணுவம் சேகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.