திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 288 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 228 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 56 பேர் பெண்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதேநேரம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 121 பேர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 698 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி தற்போது ஆயிரத்து 1,576 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.