Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா..? அதிகரித்து வரும் பாதிப்புகள்… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக சிங்கம்புணரி, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீடு தனிமைகளில் 563 பேர் தற்போது கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 78 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |