Categories
Uncategorized உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா..? ஐரோப்பிய கண்டத்திலேயே… புதிய சாதனை படைத்த பிரபல நாடு..!!

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஜெர்மனி நாடு ஒரே நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை போட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

ஜெர்மனில் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியிடப்பட்ட தகவலின்படி, புதன் கிழமை அன்று 10,88,952 பேருக்கு ஜெர்மன் மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இது பிரித்தானியா மார்ச் 20-ம் தேதி படைத்த சாதனையை முறியடித்துள்ளது. மேலும் பிரித்தானியா கடந்த மார்ச் 20-ம் தேதி அன்று ஒரே நாளில் 8,74,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது.

ஆனால் ஜெர்மனி ஒரே நாளில் தனது மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டது இதுவே முதல் முறை ஆகும். மேலும் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை 24 மணி நேரத்தில் மக்களுக்கு போட்டுள்ளனர். ஆனால் தற்போது ஜெர்மனி மக்கள் தொகையில் 21.5 மில்லியன் அல்லது 25.9 சதவீதம் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |