தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று திங்கள்கிழமை சற்று குறைந்தது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கமானது 1 கிராம் 4539 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று வெள்ளியின் விலை கிராமிற்கு ரூபாய் 0.10 குறைந்து 64.90 விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 112 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 36,472க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 14 உயர்ந்து ரூபாய் 4,559க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூபாய் 65.10க்கு விற்பனை செய்யப்படுகிறது..