Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்வளவு பணமா….? ஜோராக நடைபெற்ற விற்பனை…. புத்தாண்டு கொண்டாட்டம்….!!

புத்தாண்டை முன்னிட்டு 4 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் மதுக்கடைகள் அமைந்துள்ளது. இதில் 53 மதுக்கடைகளில் பார் வசதி உள்ளது. சாதாரணமாக நாளொன்றுக்கு மதுக்கடைகளில் 2 கோடி முதல் 3 கோடி வரை மது விற்பனை நடைபெறும். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 கோடியே 7 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இதனால் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் மொத்தம் 101 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினமான 24-ஆம் தேதி 5 கோடியே 52 லட்சத்திற்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |