பொதுவாக அனைத்து தயாரிப்பாளர்களும் தயாரிப்பு சங்கங்களும் குறைந்த முதலீட்டில் படங்கள் தயாரிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக விழா மேடைகளில் குரல் கொடுத்து வருகின்றார்கள். இருந்தபோதிலும் சிறுபட தயாரிப்பாளர்களின் வேதனை குரல்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர் டூடி படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் மதுசூதன். 2d படத்தை ஓட விடாமல் செய்து விட்டார்கள் என்பது இவருடைய குற்றச்சாட்டாகும். இது பற்றி அவர் பேசிய போது 2d ஒரு நல்ல படம் படத்தைப் பார்த்து விமர்சகர்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். மேலும் இந்த படத்தை திரையிடுவதற்காக 50 தியேட்டர்களில் பேசி முடிக்கப்பட்டது. ஆனால் பல தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்து படத்தை ஓட விடாமல் செய்து விட்டார்கள் நான் யாரிடம் போய் முறையிடுவது பட குழுவினர் அனைவரும் அழுது கொண்டிருக்கின்றார்கள். மேலும் அவர்களின் வேதனைகளை யார் தீர்ப்பது ஒரே நாளில் என் படம் முடிந்து விட்டது எங்கள் வாழ்க்கை இரண்டு போய்விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
Categories