Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி… இந்தியாவின் புதிய சாதனை… பிரதமர் மோடி, அமித்ஷா பாராட்டு…!!!!

இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. இந்தியாவில் நாள்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. அதிகபட்சமாக கடந்த 17ஆம் தேதி 88 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது. இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டு, ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “ஒரே நாளில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டுவது என்பது மிகப்பெரிய சாதனை. தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக நடத்துபவர்களுக்கும் தன்னுடைய பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |