Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் சட்டென குறைந்த பாதிப்பு… மீண்டு வரும் மும்பை மக்கள்…!!!

மும்பையில் நேற்று ஒரே நாளில் 792 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை சுகாதாரத் துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 792 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,62,476 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 22 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,396 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 2,62,476 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் 15,962 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |