அமெரிக்காவிலுள்ள பிச்சைக்காரர் ஒருவர் விலை உயர்ந்த வைர மோதிரத்தை உரியவரிடம் திருப்பி தந்ததால் அவருக்கு உலகமெங்கும் பாராட்டும் நிதி உதவியும் குவிந்தது. அந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தைச் சேர்ந்த சாரா டார்லிங்என்பவர் ஒரு பிச்சைக்காரருக்கு தன் கைப்பையில் இருந்து பணத்தையும் பொருட்களையும் எடுத்துக் கொடுத்துள்ளார்.
அதற்கு அடுத்த நாள் தன் விரலில் இருந்த வைரம் பதிக்கப்பட்ட திருமண மோதிரம் காணவில்லை என்பதை உணர்ந்துள்ளார். பிச்சையிட்ட போது அந்த மோதிரம் விழுந்திருக்கலாம் என்று எழுதியுள்ளார். அதன்பிறகு பிச்சைக்காரரிடம் சென்று விசாரித்தார். உடனே அந்த பிச்சைக்காரர் மோதிரம் என்னிடம் தான் உள்ளது நீங்கள் அதை தேடி வருவீர்கள் என்று நான் காத்திருந்தேன், என்று கூறி மோதிரத்தை அவரிடம் பிச்சைக்காரர் கொடுத்தார்.
இதனைக் கண்டு நெகிழ்ந்து போன சாரா தன் கணவருடன் இணைந்து நேர்மையான பிச்சைக்காரருக்கு நிதியுதவி அளிக்குமாறு இணையதளம் மூலமாக வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அந்த பிச்சைக்காரர் குறித்த செய்தி அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிறகு உலகமெங்கும் இருந்து நிதி உதவிகளும் பாராட்டுகளும் அவருக்கு குவிந்தன. இருந்தாலும் நான் செய்தது ஒன்றும் பெரிய காரியமல்ல,இத்தனை பாராட்டுகளுக்கும் நான் தகுதியானவன் அல்ல என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அவருக்கு உலகமெங்கும் இருந்து குவிந்த நிதி கிட்டத்தட்ட 1.5 கோடியாகும். அந்தப் பணத்தை வைத்து அவர் ஒரே நாளில் வீடு கார் என தனது வாழ்க்கையையே மாற்றி கொண்டார். இறுதியாக அவரிடம் இருந்து பிரிந்து சென்ற குடும்பமும் ஒன்றிணைந்து விட்டது. இதற்கு அவருடைய மனப்பான்மையே காரணம். இப்படிப்பட்ட மனிதர்கள் கூட உலகில் ஏதாவது ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தினமும் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பிச்சைக்காரர் தனது நற்குணத்தால் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். இதனால் பிச்சைக்காரரின் வாழ்க்கை பணக்காரராக மாறிவிட்டது.