நடிகர் விஜய் ஆண்டனியின் படமும் நடிகர் சிவகார்த்திகேயனின் படமும் ஒரே நாளில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் தேர்தல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மேலும் இந்தப்படம் ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படமும் ரம்ஜான் தினத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . இதனால் ஒரே நாளில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனியின் படங்கள் வெளியானால் வசூல் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.