Categories
மாநில செய்திகள்

ஒரே நாளில் 1200 விமானங்கள் ரத்து… நிறுவனத்தின் அறிவிப்பால் பயணிகள் கடும் அவதி…!!!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று  பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. உலக சுகாதார அமைப்பு நோய் தடுப்பு பற்றி அறிவுரைகளை அனைத்து நாடுகளுக்கும் வழங்கிவருகின்றது. அதன் அடிப்படையில் நாடுகள் ஊரடங்கு பிறப்பித்தது. மேலும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பேருந்து சேவை, ரயில் சேவை போன்றவை இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற போக்குவரத்தை தொடர்ந்து விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான பயணிகள் மூலமாகத்தான் கொரோனா  அதிகரித்து வருவதாக  கருதப்பட்டது.

அதனால் அனைத்து நாடுகளுக்கும் பயணிகள் விமானத்தை ரத்து செய்தது. இந்த நிலையில் அனைத்து நாட்டு அரசுகளும் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு பாதிப்பு எண்ணிக்கையை படிப்படியாக குறைத்தது. இந்த நேரத்தில் விமான பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு மீண்டும் விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளது. மேலும் பயணிகள் 2 டோஸ் கொரோனா  தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை பின்பற்றி வந்துள்ள நிலையில் தற்போது அமெரிக்காவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவில் நிலவி வரும் மோசமான வானிலை போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று மட்டும் 1200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் 29ஆம் தேதி 1500 விமானங்களும், மே 27 ம் தேதி 23,000 விமானங்களும் ரத்து செய்ய உள்ளதாக அந்நாட்டு விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது. மேலும் அதிக அளவில் விமானங்களை ரத்து  செய்வது  இதுவே முதன் முறை என விமான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |