Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 13 லட்சம் தடுப்பூசி செலுத்தி…. ஆந்திரா புதிய சாதனை…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 13,72,481 தடுப்பூசிகள் செலுத்தி ஆந்திர மாநிலம் சாதனை படைத்துள்ளது. நேற்று நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் 47% ஆந்திர மாநிலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 10 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் துவங்கி 13 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பு ஊசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது.

 

Categories

Tech |