Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 1,341 பேர் கொரோனாவால் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் ஒரே நாளில் 1,341 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வருகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 1,341 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,23,354 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |