புதுவையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக அனைத்து பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரியவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடும் உடல் வலி, சளி ,தொண்டை அலர்ஜி, தலைக்கனம் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகின்றது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பள்ளி மாணவர்களிடையே அதிக அளவு காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட குழந்தைகள் வீட்டில் இருந்தபடி முகம் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதன் மூலம் வைரஸ் காய்ச்சலை தடுக்க முடியும்.
மேலும் சுகாதாரத் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் இன்று முதல் 25ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று புதுச்சேரியில் 150 குழந்தைகளும் 30 பெரியோர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாளை அல்லது நாளை மறுநாள் இவர்கள் சிகிச்சை முடிந்து விடு திரும்புவார்கள் என்று கூறப்படுகின்றது. தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது பெற்றோர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.