Categories
சினிமா

ஒரே நாளில் 18 கோடி நஷ்டம்…. உங்க சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதா விஷால்….????

நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 21 கோடியை தராததால் அந்நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில் ஒரே நாளில் தனக்கு 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பணத்தை திருப்பி தர முடியாது என்றும் விஷால் வாதாடினார். அதற்கு நீதிபதிகள், உங்கள் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு தன்னுடைய சினிமா வாழ்க்கை முடியவில்லை எனவும் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்யவே தொடர்ந்து படங்களில் நடித்து வருவதாகவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விஷாலின் விளக்கத்தையும், சொத்து விபரங்கள் அடங்கிய பிராமண பத்திரத்தையும் தாக்கல்செய்ய உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மேலும் அன்றைய தினமும் நீதிமன்றத்தில் விஷால் ஆஜராகவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |