நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,355 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,535 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இந்த கொடிய நோய்க்கு 146 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 8,102 பேர் நோய் பாதிப்பிலிருந்து பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,287 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் 2ஆம் அலையை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக் கவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றனர்.