Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஒரே நாளில்” 2 இடங்களில் கைவரிசை….. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!!

கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை அருகே இலந்தவிலை பகுதியில் குருசடி ஒன்று அமைந்துள்ளது. இந்த குருசெடியின் உண்டியலை மர்ம நபர்கள் சிலர் கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. இதன் அருகில் இருந்த ஒரு டீக்கடையில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் புகுந்து‌ 6,300 ரூபாய் பணம் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து இரணியல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு காவல்துறையினரின் முன்னிலையில் குருசடியின் உண்டியல் எண்ணப்பட்டது. அதில் மொத்தம் 21,000 பணம் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குருசடி மற்றும் டீக்கடை ஆகிய இரண்டிலும் ஒரே நபர் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |