Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் புதிய உச்சம்… ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று… வைரஸினால் ஏற்படும் விளைவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 737 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில்  12 ஆயிரத்து 561 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஆயிரத்து 1064 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |