மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்படுத்திவரும் சூழ்நிலையிலும், இதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வந்த சூழ்நிலையில், தற்போது சென்னையை தாண்டி பிற மாவட்ட பகுதிகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில், விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் 90 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரையில் இன்று ஒரே நாளில் 315 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளது. எனவே சென்னையை அடுத்து பாதிப்பு அதிகம் பரவும் மாவட்டமாக தற்போது மதுரை மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.